/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்
/
ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்
ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்
ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்
ADDED : ஆக 06, 2024 12:35 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை ஏ.ஐ.யு., எனப்படும் 'ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட்' அதிகாரிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
உதவி கமிஷனர்கள் முதல் ஹவில்தார் வரை, விமான நிலைய பணியில் இருப்பவர்கள் பணிக்கு வந்தவுடன் மொபைல் போன்களை இணை கமிஷனரிடம் ஒப்படைக்க வேண்டும். பணி முடிந்த பின் மொபைல் போன்களை எடுத்துச் செல்லலாம். பணிக்கு இடையில் அழைப்புகள் எதேனும் வந்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆய்வு செய்யப்படும்.
பணியில் உள்ள போது விமான நிலையத்திற்கு வெளியே சென்று சிலரிடம் பேசுவது, சொந்த காரணங்களுக்காக அருகில் உள்ள இடங்களுக்கு செல்வது கூடாது.
பணியில் இருக்கும் அலுவலர்கள் யாரும், உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல் விமான நிலைய வருகை, புறப்பாடு பகுதிகளுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.