/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய கூடைப்பந்து: சென்னை பல்கலை தகுதி
/
அகில இந்திய கூடைப்பந்து: சென்னை பல்கலை தகுதி
ADDED : நவ 07, 2024 12:42 AM

சென்னை, ந
இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்ட் பல்கலை இணைந்து, பல்கலைகளுக்கு இடையிலான தென் மண்டல கூடைப்பந்து போட்டியை, பெங்களூரில் நடத்தின.
போட்டியில், சென்னை பல்கலை, ஹிந்துஸ்தான் பல்கலை உட்பட தென் மாநில அளவிலான 105 அணிகள் பங்கேற்றன.
அனைத்து 'லீக்' போட்டிகள் முடிவில், பெங்களூரு ஜெயின் பல்கலை அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
சென்னை பல்கலை அணி, மூன்று போட்டிகளில், இரண்டில் வெற்றி பெற்று, இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.
சென்னை ஹிந்துஸ்தான் பல்கலை அணி, மூன்று போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்தது. கிறிஸ்ட் அணி, நான்காம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, இந்திய பல்கலையின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், கிறிஸ்ட் பல்கலையின் பதிவாளர் அனில் பின்டோ உள்ளிட்டோர், பரிசுகளை வழங்கினர்.
மேலும், போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்க உள்ள, அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளன.