/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் 5 மண்டலத்திற்கு துார்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு
/
தாம்பரத்தில் 5 மண்டலத்திற்கு துார்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு
தாம்பரத்தில் 5 மண்டலத்திற்கு துார்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு
தாம்பரத்தில் 5 மண்டலத்திற்கு துார்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 17, 2024 12:24 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் கால்வாய்களை துார் வார, ஐந்து மண்டலத்திற்கும் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரம் மாநகராட்சி ஐந்து மண்டலங்களையும், 70 வார்டுகளையும் கொண்டது.
ஆண்டுதோறும் பருவமழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார் வாருவது வழக்கம். அப்படியிருந்தும், வெள்ள பாதிப்புகள் குறையவில்லை.
கடந்தாண்டு, கால்வாய்களை துார்வாரியதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், வழக்கமான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
அதனால், இம்முறை இவ்விஷயத்தில் கவனம்செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், மாநகராட்சி கமிஷனரை சந்தித்து மனு கொடுத்த, 2 - 3 மண்டலங்களின் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையத்தினர், மழைக்கு முன் கால்வாய்களை துார் வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மழைநீர் கால்வாய்களை துார் வார ஐந்து மண்டலத்திற்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

