/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓரிக்கை மண்டபத்தில் பஞ்சாங்கம் கணிப்பு
/
ஓரிக்கை மண்டபத்தில் பஞ்சாங்கம் கணிப்பு
ADDED : ஆக 15, 2024 12:26 AM

சென்னை, காஞ்சிபுரம் அடுத்த, ஓரிக்கை ஸ்ரீமஹா பெரியவா மணி மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடம் சார்பில், பஞ்சாங்க சதஸ் மூன்று நாட்களாக நடந்தது. வரும் 2024 - 25ம் ஆண்டுக்கான பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது.
பிரதானமாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா கேரளா, இலங்கை, மலேசியா ஆகிய பகுதிகளிலிருந்து, 50 பஞ்சாங்க கணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
நிறைவு நாளான நேற்று, காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பஞ்சாங்க கணிப்பாளர்கள் அனைவருக்கும், சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, விஜயேந்திரர் வழங்கிய அருளாசி:
கணிதம், சாஸ்திரம், விஞ்ஞானம். இவை மூன்றும் இணைந்து, மக்களுக்கு முக்கியமான ஒவ்வொரு நாளையும் முன்கூட்டியே தெரிவிப்பது பஞ்சாங்கம்.
எனவே, பஞ்சாங்கம் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.