ADDED : ஆக 11, 2024 01:42 AM

சென்னை,:சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள வன வாணி பள்ளியின் 61வது ஆண்டு விழா, இங்குள்ள மாணவர்கள் கலாசார மையத்தில் நடந்தது. முதல்வர் சதீஷ் குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
சென்னை ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடந்தாண்டு நடந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''புதியவற்றை கண்டுபிடிப்பதற்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்கள், அவர்களது இலக்குகளை அடைவதற்கு ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
தேர்வின் போதும், கற்கும்போதும் மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் இடம் அளிக்கக் கூடாது,'' என்றார்.
தொடர்ந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி நிர்வாக குழு தலைவரும், ஐ.ஐ.டி., பேராசிரியருமான தனவேல், செயலர் ரமன் குமார், துணை முதல்வர் பிரின்சி டாம் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

