/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் சி.சி., 'த்ரில்' வெற்றி
/
அம்பத்துார் சி.சி., 'த்ரில்' வெற்றி
ADDED : மார் 26, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, டி.என்.சி.ஏ., ஆதரவில்திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று ரெட்ஹில்ஸ் அடுத்த எடப்பாளயத்தில் நடந்த போட்டியில், அம்பத்துார் சி.சி., மற்றும் திருவள்ளூர் சி.சி., அணிகள் மோதின.
இதில், முதலில் பேட் செய்த அம்பத்துார் சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் அடித்தது.
அடுத்து களமிறங்கியதிருவள்ளூர் சி.சி., அணி, 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது.
இதனால், அம்பத்துார் சி.சி., அணி த்ரில் வெற்றி பெற்றது.

