/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் இணைப்பு சாலையில் நடைபாதை கடைகளால் அவதி
/
அம்பத்துார் இணைப்பு சாலையில் நடைபாதை கடைகளால் அவதி
அம்பத்துார் இணைப்பு சாலையில் நடைபாதை கடைகளால் அவதி
அம்பத்துார் இணைப்பு சாலையில் நடைபாதை கடைகளால் அவதி
ADDED : ஜூலை 04, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், பழைய டவுன்ஷிப் சாலையானது அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கான இணைப்பு சாலையாக பயன்படுகிறது.
இதனால் பலரும் அந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்டோ மற்றும் நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளால், அந்த சாலை குறுகி விட்டது.
அங்குள்ள வங்கி மற்றும் மாநகராட்சி பூங்காவிற்கு சென்று வரும் முதியோர் மற்றும் பெண்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக, மிகவும் அவதிப்படுகின்றனர்.
மாநகராட்சியும், அம்பத்துார் போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வரதராஜன், அம்பத்துார்.