ADDED : செப் 16, 2024 02:23 AM
அ நிறம் | அளவு
தண்டையார்பேட்டை:கொடுங்கையூர், முத்தமிழ் நகர், ஆறாவது பிரதான சாலையில் உள்ள பழுதடைந்துள்ள அம்மா உணவகம் 3.11 லட்ச ரூபாயிலும், கொடுங்கையூர், ஜி.என்.டி.சாலையில் உள்ள அம்மா உணவகம் 3.95 லட்சத்திலும் மேம்படுத்தப்படுகின்றன.
புது வினோபா நகர், மூன்றாவது தெருவில் உள்ள அம்மா உணவகம் 1.60 லட்சத்திலும், கொருக்குப்பேட்டை, அன்னை சத்யா நகரில் உள்ள அம்மா உணவகம் 8.30 லட்சத்திலும் புதுப்பிக்கப்படுகின்றன.
இதே போல, நேரு நகர் பிரதான சாலையில் உள்ள அம்மா உணவகம் 4.90 லட்சத்திலும், தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகம், 6.38 லட்சத்திலும் புதுப்பிக்கப்படுகின்றன.
மொட்டை தோட்டத்தில் உள்ள அம்மா உணவகம், 8.60 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது.
