/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்மா உணவகம் மீண்டும் கட்டப்படுமா!
/
அம்மா உணவகம் மீண்டும் கட்டப்படுமா!
ADDED : மே 01, 2024 12:45 AM
கொளத்துார், திரு.வி.க., நகர் மண்டலம், 67வது வார்டு, பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அம்மா உணவகம் கட்டடம், 65 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், பயன்பாட்டில் உள்ள அம்மா உணவக கட்டடத்தை இடிக்க, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
அம்மா உணவக கட்டடம் இடிக்கப்படுவதால், அதன் அருகிலேயே தற்காலிகமாக வேறு கட்டடத்திற்கு அம்மா உணவகத்தை மாற்றியமைக்க வேண்டும்.
கட்டடம் கட்டி முடித்ததும், இதே இடத்திலேயே உணவகத்தை திறக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது பசியாற்றும் இந்த உணவகம், பகுதி மக்களுக்கு உதவிகரமாக செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, சமீபத்திய மழை வெள்ள பாதிப்பின் போது, இங்கிருந்து உணவு சமைத்து கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.