/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கிய மின் ஊழியர் பலி
/
டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கிய மின் ஊழியர் பலி
ADDED : ஜூன் 15, 2024 12:20 AM

படப்பை, கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகுப்பம் பகுதி யைச் சேர்ந்தவர் ஞானதுரை, 50. இவர், தாம்பரம் அருகே படப்பை மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள 'எம்பயர் அவன்யு' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஞானதுரை தனியாக ஈடுப்பட்டார்.
அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் மின்வாரியத்தினர், மின்சாரத்தை துண்டித்து ஞானதுரை உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

