/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு தடுப்பு விழுந்து முதியவர் படுகாயம்
/
இரும்பு தடுப்பு விழுந்து முதியவர் படுகாயம்
ADDED : ஆக 22, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கீழ்ப்பாக்கம், கெல்லீஸ் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 65. நேற்று முன்தினம் இரவு வள்ளுவர் கோட்டம் வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஹாட்சிப்ஸ் ஹோட்டல் அருகே சென்ற போது, திடீரென 10 அடி உயரமுள்ள மெட்ரோ இரும்பு தடுப்பு விழுந்தது.
இதில், அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்த மெட்ரோ ரயில் பொறியாளர் ஒருவர் மீட்டு, சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.