/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
17 கிலோ கஞ்சாவுடன் ஆந்திர வாலிபர் கைது
/
17 கிலோ கஞ்சாவுடன் ஆந்திர வாலிபர் கைது
ADDED : மார் 09, 2025 01:30 AM

அம்பத்துார், -
பட்டரைவாக்கம் ரயில் நிலையம் பின்புறம், கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கிடமான வகையில், சுற்றிதிரிந்த வாலிபரை நோட்டமிட்ட போலீசார், அவரிடம் பேச்சு கொடுத்தனர்.
முன்னுக்கு பின், முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், கிலோ கணக்கில் கஞ்சா இருப்பது தெரிந்தது.
அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குப்பம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜுலு, 29, என தெரிந்தது.
ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, அம்பத்துார் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வடமாநில வாலிபர்களிடம் விற்பனை செய்தது தெரிந்தது.
அவரிடம் இருந்த, 1.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.