/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லிப்ட்' தராத ஆத்திரம் இளைஞர் மீது தாக்குதல்
/
'லிப்ட்' தராத ஆத்திரம் இளைஞர் மீது தாக்குதல்
ADDED : பிப் 25, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அயனாவரம், வசந்த கார்டன் 2வது தெருவைச் சேர்ந்தவர் இனியவன், 18. இவர், கடந்த 21ம் தேதி, பைக்கில் மதுரை தெரு வழியாக சென்றார்.
அப்போது, அயனாவரம் வசந்த கார்டன் 1வது தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 38, என்பவர், இனியவனை வழிமறித்து 'லிப்ட்' கேட்டார். அதற்கு, இனியவன் முடியாது எனக்கூறி சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 22ம் தேதி இனியவன் வீட்டிற்கு சென்று, அவரிடம் அநாகரிகமாக பேசி, கன்னத்தில் அறைந்தார். மேலும், அங்கு கிடந்த மரக்கட்டையாலும் தாக்கினார்.
இதுகுறித்த புகாரையடுத்து, அயனாவரம் போலீசார் பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது, அயனாவரம் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளன.

