/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செல்ல பிராணிகளுக்கு ஆண்டுதோறும் பதிவு கட்டாயம்
/
செல்ல பிராணிகளுக்கு ஆண்டுதோறும் பதிவு கட்டாயம்
ADDED : மே 11, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி அறிவிப்பு:
செல்லப்பிராணிகளுக்கு பதிவு உரிமம் பெறுவதற்கு, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
செல்லப்பிராணிகளின் விபரங்களை பதிவு செய்தபின், மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்பின், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செல்லப்பிராணிகள் வளர்ப்போர், ஆண்டுதோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் புதுப்பித்து பெற்று கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.