ADDED : ஜூன் 25, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது, போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்பது குறித்து, போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருமங்கலம் போலீசார் நேற்று, அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியுடன் இணைந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்து, ஓவியப் போட்டியை நடத்தினர்.
இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள், தடுப்பு முறைகள் குறித்து ஓவியம் வரைந்தனர்.
போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.