ADDED : மே 02, 2024 12:28 AM

அ நிறம் | அளவு
சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நேற்று, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம் நடத்தப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக, பிளாஸ்டிக் பொருட்களால் உண்டாகும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டது.
இறுதியில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில், கடற்கரைக்கு வந்தோரிடம் துணிப்பைகள் வழங்கப்பட்டன.
