/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகரில் கேட்பாரற்ற வாகனங்கள் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அட்டூழியம்
/
அண்ணா நகரில் கேட்பாரற்ற வாகனங்கள் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அட்டூழியம்
அண்ணா நகரில் கேட்பாரற்ற வாகனங்கள் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அட்டூழியம்
அண்ணா நகரில் கேட்பாரற்ற வாகனங்கள் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அட்டூழியம்
ADDED : மார் 04, 2025 12:08 AM

அண்ணா நகர், அண்ணாநகர் பகுதிகளில், கேட்பாரற்ற வாகனங்களை ஆக்கிரமித்து சமூக விரோத செயல்களுக்காக சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக, நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இதன்படி, சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, அந்த உத்தரவு பல இடங்களில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அண்ணா நகர், ஆறாவது அவென்யு, 'பி' பிளாக் பகுதி, 21, 22வது தெருக்களில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஏராளமானோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியின் சாலையோரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல், 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆறு ஆட்டோக்கள் மற்றம் ஒரு கார் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை ஆக்கிரமித்து, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:
குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் யாருடையவை என்பதே தெரியவில்லை. இரவு நேரங்களில் இந்த வாகனங்களின் உதிரிபாகங்களை திருடுவது, மது மற்றும் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட அட்டூழியங்கள் நடக்கின்றது.
இதுகுறித்து, அண்ணா நகர் போலீஸ் மற்றும் மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் பயனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.