/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீங்கள் கிரிக்கெட் வீரரா... உங்களுக்கு வாய்ப்பு
/
நீங்கள் கிரிக்கெட் வீரரா... உங்களுக்கு வாய்ப்பு
ADDED : மே 06, 2024 12:52 AM
சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின், யூ - 19 வீரர்களை தேர்வு செய்யும் முகாம், வரும் 15 முதல், 18ம் தேதி வரை சேப்பாக்கம் எம்.ஏ.சி., 'பி' மைதானத்தில் நடக்கிறது.
சென்னையில் வசிக்கும் வீரர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்க முடியும்.
கடந்த 2005 செப்., 1ம் தேதி அல்லது 2008 ஆக., 31ம் தேதிக்குள் பிறந்த, 19 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.tnca.in என்ற இணையதளத்தில், 11ம் தேதி மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பிற்கு பின், வீரர்கள் தேர்வு செய்யப்படும் இடம், நேரம், நாள் உள்ளிட்ட விபரங்கள், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.