தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடனை திருப்பி கேட்டதில் கைகலப்பு

கடனை திருப்பி கேட்டதில் கைகலப்பு

கடனை திருப்பி கேட்டதில் கைகலப்பு


ADDED : ஏப் 26, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொளத்துார், மாதவரம் பொன்னியம்மன் மேடு கணபதி நகரை சேர்ந்தவர் கெஜலட்சுமி, 46. கொளத்துார், ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் தேவி, 42. இவரது கணவர் புருஷோத்தம்மன்.

இவர்கள் கெஜலட்சுமியிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இதில், 50,000 ரூபாய் திருப்பி கொடுத்த நிலையில், மீதியை திருப்பி தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில், கெஜலட்சுமியின் உறவினர் ஆகாஷ், தேவி, புருஷோத்தம்மன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

மருத்துவமனை அளித்த புகாரை தொடர்ந்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஆகாஷ் மற்றும் கெஜலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஆகாஷ் சிறையில் அடைக்கப்பட, கெஜலட்சுமி நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us