/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராணுவ ஓய்வூதியர்கள் பரிசளித்து கவுரவிப்பு
/
ராணுவ ஓய்வூதியர்கள் பரிசளித்து கவுரவிப்பு
ADDED : ஆக 15, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சுதந்திரத்திற்காக போராடிய ராணுவ வீரர்களை போற்றும் வகையில், முப்படையில் பணியாற்றி ஒய்வு பெற்ற 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு சென்னையில் உள்ள பாதுகாப்பு துறை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பரிசு வழங்கி கவுரவிக்கும் விழா நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக அரசு கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, ராணுவ ஒய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில், சென்னை பாதுகாப்பு துறை கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.