/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டா வாங்கி தருவதாக மோசடி ரூ.15 லட்சம் சுருட்டியவர் கைது
/
பட்டா வாங்கி தருவதாக மோசடி ரூ.15 லட்சம் சுருட்டியவர் கைது
பட்டா வாங்கி தருவதாக மோசடி ரூ.15 லட்சம் சுருட்டியவர் கைது
பட்டா வாங்கி தருவதாக மோசடி ரூ.15 லட்சம் சுருட்டியவர் கைது
ADDED : ஆக 02, 2024 12:26 AM
அசோக் நகர், அசோக் நகர் 32வது தெருவைச் சேர்ந்தவர் சோபனா, 45. இவருக்கு சொந்தமான இடம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
அந்த இடத்திற்கு பட்டா வாங்கி தருவதாக கூறி, சோபனாவை அணுகிய மோகன் குமார், அறிவழகன், சரவணன் ஆகிய மூன்று பேர், இதுவரை 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.
ஆனால், பட்டா வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சோபனா, மோசடி செய்து பணம் பெற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அசோக் நகர் காவல் நிலையத்தில் ஜூன் 24ல் புகார் அளித்தார்.
இதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அசோக் நகர் போலீசார், மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நாகை, வேதாரண்யத்தைச் சேர்ந்த மோகன்குமார், 43, என்பரை கிண்டியில் நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அறிவழகன், சரவணன் ஆகியோரை தேடுகின்றனர்.