ADDED : ஆக 10, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
சென்னை, ஆக. 11–
மக்கள் குறைதீர் முகாமில், விபத்தில் கால் இழந்த ஐந்து பேருக்கு, செயற்கை கால்களை, கலெக்டர் மாலதி ெஹலன் வழங்கினார்.
பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
இதில், விபத்தில் கால் இழந்த திருவொற்றியூர், காவாங்கரை, கீழ்ப்பாக்கம், அயனாவரத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு, 1.69 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வழங்கினார்.
தொடர்ந்து, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, 152 மனுக்கள் பெறப்பட்டன.
