/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காக்கா ஆழி குறித்த தீர்ப்பாயம் விபரம் கேட்பு
/
காக்கா ஆழி குறித்த தீர்ப்பாயம் விபரம் கேட்பு
ADDED : ஆக 31, 2024 12:17 AM
சென்னை,'தென் அமெரிக்க மஸ்ஸல்' எனப்படும் காக்கா ஆழியால், கடல் வாழ் உயிரினங்களான இறால், மீன் போன்றவை வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும் என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக சுற்றுச்சூழல், நீர்வளம், மீன் வள துறை செயலர்கள் கூட்டத்தை, தமிழக அரசு தலைமை செயலர் கூட்டி, காக்கா ஆழியை அழிப்பது குறித்து ஆலோசிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் பிறப்பித்த உத்தரவு:
காக்கா ஆழி பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, உரிய அதிகாரிகளுடன் ஆலோசிக்க, அரசு தலைமை செயலருக்கு உத்தரவிட்ட நிலையில், ஆக., 22ல் கூட்டம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
கூட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை, அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.