/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியே இருந்த பெண்ணிடம் அத்துமீறல்
/
தனியே இருந்த பெண்ணிடம் அத்துமீறல்
ADDED : செப் 04, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:கொளத்துார் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபரின் மனைவி, நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, வாலிபரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சுதாரித்த அப்பெண், பின்புறமாக வெளியே ஓடி சத்தம் போட்டுள்ளார். உடனே, மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.