/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் எஸ்.பி.,யின் கணவர் மீது தாக்குதல்
/
பெண் எஸ்.பி.,யின் கணவர் மீது தாக்குதல்
ADDED : ஜூன் 25, 2024 12:15 AM
சென்னை, சேத்துப்பட்டு ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் திருமுருகன்; தனியார் நிறுவன மேலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு, அமைந்தகரை திரு.வி.க., பூங்கா வழியாக, உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற கார் மீது, லேசாக சைக்கிள் உரசியதாக கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் நான்கு பேர், திருமுருகனிடம் வாக்குவாதம் செய்து, தாக்கி உள்ளனர். காரை சீர் செய்ய, 20,000 ரூபாய் கேட்டு மிரட்டிய அவர்கள், 'ஜிபே' வாயிலாக, 5,000 ரூபாய் பறித்துள்ளனர்.
காயமடைந்த அவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் அவர், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஷியாமளா தேவியின் கணவர் என்பதும், இருவரும் பிரிந்து வாழ்வதும் தெரிந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.