/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் பிறந்த நாள் 3,000 பேருக்கு உதவி
/
முதல்வர் பிறந்த நாள் 3,000 பேருக்கு உதவி
ADDED : மார் 02, 2025 12:49 AM

திருவொற்றியூர், தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி, நேற்று காலை, திருவொற்றியூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., -- கே.பி. சங்கர் தலைமையில், ஐந்து இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விம்கோ நகர், சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் உட்பட ஐந்து இடங்களில், 3,000க்கும் அதிகமான பயனாளிகளுக்கு, இஸ்திரி பெட்டி, சேலை, அரிசி மூட்டை, பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
கார்கில் நகரில் குடிநீர் பிரச்னை இருப்பதாக தெரிகிறது. நாளை காலை, இங்ககேயே முகாமிட்டு, இந்த பிரச்னையை தீர்த்து வைத்து விட்டு தான் செல்வேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பாணியில் துணை முதல்வர் உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார்.
வடசென்னையில் மழை - வெள்ள பாதிப்புகளை அறிந்ததும், நேரடியாக களத்தில் நின்றவர் அவர். கொசஸ்தலை ஆற்றை துார்வாரி, வெள்ள பாதிப்பை தடுத்து உள்ளார்.
முகத்துவாரத்தில், 150 கோடி ரூபாய் செலவில், துாண்டில் வளைவு அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது.
இவ்வாறு, கே.பி.சங்கர் பேசினார்.