/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளர் கைது
/
மின் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளர் கைது
ADDED : செப் 10, 2024 12:50 AM

திருவள்ளூர், -
திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மதுகர், 49. இவர் மணவாளநகர் பகுதியில் கார் 'சர்வீஸ்' நிலையம் நடத்தி வருகிறார்.
சர்வீஸ் நிலையத்திற்கு ஒரு முனை மின் இணைப்பு உள்ளது. மும்முனை மின் இணைப்பு பெற, சில நாட்களுக்கு முன், பெரியகுப்பம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு உதவி பொறியாளர் கஜேந்திரன், 52 என்பவர், 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து மதுகர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் மதுகர் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய, 2,500 ரூபாய் நோட்டுகளை மதுகரிடம் கொடுத்து, உதவி பொறியாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
நேற்று பெரியகுப்பம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற மதுகர், ரசாயனம் தடவிய நோட்டுகளை கஜேந்திரனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கஜேந்திரனை கைது செய்தனர்.

