/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் மீது தாக்குதல்: போதை ஆசாமிகள் கைது
/
போலீசார் மீது தாக்குதல்: போதை ஆசாமிகள் கைது
ADDED : ஜூலை 02, 2024 01:24 AM
ஆர்.கே.நகர், மணலி சாலை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், ஆர்.கே.நகர் காவல் நிலைய போலீசார் பிரகாஷ், பிரதாப் ஆகியோர், நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சுண்ணாம்பு கால்வாய் அருகில், மூவர் கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கண்டித்தனர்.
ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், போலீசாரை அவதுாறாக பேசி தாக்கினர். அவ்வழியாக வந்த போலீஸ்காரர் தமிழ்செல்வன் இதுகுறித்து தட்டிக்கேட்ட போது, அவரது பைக் சாவியையும் பறித்து மர்ம நபர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்கு பதிந்த ஆர்.கே.நகர் போலீசார், மாநில கல்லுாரி மாணவரான பழைய வண்ணாரப்பேட்டை, முத்தைய முதலி தெருவைச் சேர்ந்த சந்தோஷ், 21, சஞ்சய், 22, பாலாஜி, 23, ஆகியோரை கைது செய்தனர்.