/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடியை கொல்ல முயற்சி தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் கைது
/
ரவுடியை கொல்ல முயற்சி தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் கைது
ரவுடியை கொல்ல முயற்சி தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் கைது
ரவுடியை கொல்ல முயற்சி தி.மு.க., பிரமுகர் உட்பட 6 பேர் கைது
ADDED : மே 09, 2024 12:16 AM

பாரிமுனை, சென்னை, பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் கும்பல் இருசக்கர வாகனத்தில் நின்றிருப்பதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து அங்கு இருந்த ஆறு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சென்னை, ஓட்டேரி, மங்களபுரத்தைச் சேர்ந்த, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மங்களபுரம் தி.மு.க., சிறுபான்மையினர் அணி துணை செயலர் யஸ்வந்த் ராயன், 25, பெரம்பூரை சேர்ந்த காலேப் பிரான்சிஸ், 25, கோகுல்நாத், 20, கார்த்திக், 25, அயானவரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 20, ஜெய்பிரதாப், 18, என்பது தெரியவந்தது.
யஸ்வந்த் ராயன், பிரான்சிஸ் ஆகியோருக்கும் சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சரண் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. 2023, நவம்பரில், அம்பத்துாரில் வைத்து யஸ்வந்த் ராயனை, சரண் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டியதில் படுகாயத்துடன் யஷ்வந்த் உயிர் தப்பினார்.
சரண் மற்றும் அவரது கூட்டாளிகளை அம்பத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் சரண் தன் கூட்டாளிகளுடன் ஜாமினில் வெளி வந்துள்ளார்.
இந்நிலையில், யஸ்வந்த் ராயன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சரணை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார்.
சரண் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு விசாரணைக்காக சரண், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வருவதை அறிந்த யஸ்வந்த்ராயன், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சரணை கொலை செய்ய பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிந்தது.
போலீசார் ஆறு பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.