ADDED : மே 25, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
சேலையூர்: கிழக்கு தாம்பரம், வினோபா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், 50; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி சென்றார்.
நள்ளிரவில், ஏதோ தீப்பற்றி எரிவது போல் சத்தம் கேட்டு, சசிகுமார் வெளியே வந்து பார்த்தபோது, ஆட்டோ தீப்பற்றி பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஆட்டோ முழுதும் எரிந்து நாசமானது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
