/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரிடம் கைவரிசை ஆட்டோ ஓட்டுனர் கைது
/
பயணியரிடம் கைவரிசை ஆட்டோ ஓட்டுனர் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:13 AM
சென்னை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிராசுதீன், 29. ஈரோடில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 18ம் தேதி இரவு, கட்டட வேலைக்காக சென்னைக்கு ரயிலில் வந்தார்.
அங்கு காத்திருந்த இவரது நண்பர்களான முகமது ஜமால், முகமது அசாந்து ஆகியோருடன், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள உணவகத்தில் சாப்பிட, ஆட்டோவில் சென்றார்.
ஆட்டோ ஓட்டுனர் பல வழியில் சுற்றிச் சென்று, கட்டணமாக 1,200 ரூபாய் கேட்டுள்ளார். இவர்கள் தர மறுத்ததால், முகமது சிராசுதீனிடமிருந்த 2,000 ரூபாய், மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். மறுநாள் 19ம் தேதி சிராசுதீன், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதன்படி, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்ததில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கரன், 31, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று இவரை, போலீசார் கைது செய்தனர்.