ADDED : மே 24, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 69, 'எப் - பிளாக்' 6வது மாடியில் வசித்தவர் கண்ணன், 43; ஆட்டோ ஓட்டுனர்.
நேற்று முன்தினம் மதியம், குடிபோதையில் தனது தாய் தமிழ்ச்செல்வியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் மறுத்து விட்டார்.
பின், தாய் அருகேயுள்ள, ரேஷன் கடைக்கு சென்றிருந்த நிலையில், கண்ணன், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.