/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியருக்கான விழிப்புணர்வு பயிலரங்கு
/
மாணவியருக்கான விழிப்புணர்வு பயிலரங்கு
ADDED : ஏப் 25, 2024 12:38 AM
சென்னை, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக 'அவள்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, திருவல்லிக்கேணி, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், மாணவிகளுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு நேற்று நடந்தது.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புபிரிவு துணை கமிஷனர் வனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து எவ்விதம் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் எடுத்து உரைத்தார். மேலும், காவல் உதவி செயலி உட்பட பல்வேறு காவல் உதவி எண்கள் குறித்தும் உரையாற்றினார்.
இந்த பயிலரங்கில், 400க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.

