/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயனாவரம் - ஓட்டேரி சுரங்க பணி நிறைவு
/
அயனாவரம் - ஓட்டேரி சுரங்க பணி நிறைவு
ADDED : ஜூன் 14, 2024 12:00 AM

சென்னை, மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுரங்கம் தோண்டும் ஏழு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் ஒரு பகுதியாக அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான சுரங்கப்பாதை பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
அயனாவரம் நிலையத்திலிருந்து ஓட்டேரி நிலையத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி, கடந்த ஆண்டு அக்., 23-ல் தொடங்கியது. இந்த பணிக்காக ஆனைமலை என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அயனாவரம் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி, 925 மீட்டர் தொலைவுக்கான பணி, வெற்றிகரமாக முடித்து ஓட்டேரி நிலையத்தை இயந்திரம் வந்தடைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

