/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அய்யப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் ‛' தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
/
அய்யப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் ‛' தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
அய்யப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் ‛' தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
அய்யப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் ‛' தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
ADDED : ஆக 05, 2024 01:09 AM

அய்யப்பன்தாங்கல், 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'கிரேஸ் சூப்பர் மார்க்கெட்' சார்பில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரை ஒன்றிணைத்து, 'ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
'நிசான் ஆட்டோ ரிலே' மற்றும் வி.பி.சி., ஜுவல்லரி, மயில் பிராண்ட் ஹோம் கேர் புரோடக்ட்ஸ்' மற்றும் கிட்டீ பட்டீ' ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன.
அந்த வகையில், பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை, அய்யப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேண்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று காலை முதல் இரவு வரை, ஆடி கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், உற்சாகத்துடன் பங்கேற்றதால், குடியிருப்பே திருவிழாக்கோலம் பூண்டது.
இந்நிகழ்வில் காலையில், பெண்களுக்கான சமையல் போட்டி மற்றும் கோலப்போட்டி நடந்தது. ஆண்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.
மாலையில் 'டாய் ரயில், ஜம்பிங் பலுான், வாட்டர் மார்க் பெயின்ட்' மற்றும் கேலி சித்திரம், மேஜிக் ஷோ, ஆடல், பாடல், ஆர்ட் மற்றும் கிராப்ட் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. மேலும், உறியடி உள்ளிட்ட பல வகை போட்டிகளில், முதியோர் முதல் சிறுவர்கள் வரை உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.
அத்துடன், கிராமத்து நினைவுகளை ஏற்படுத்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை மாட்டு வண்டியின் மீது ஏற்றி, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டது.
கிரேஸ் சூப்பர் மார்க்கெட் சார்பில் ஷாப்பிங் போட்டிகள், வி.பி.சி., ஜுவல்லரி சார்பில் மனைவியருக்கு கணவர்கள் நகை அணிவிக்கும் போட்டி நடத்தப்பட்டது. அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பொழுதுபோக்கு
எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில், இதற்கு முன் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். ஆனால், வெளியே இருந்து வந்து, முதல் முறையாக 'தினமலர்' சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வழிவகை செய்துள்ளது. குழந்தைகள், பெரியவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.
- ரமேஷ்விஜய் ராகவன், 68,
குடியிருப்போர் நலச்சங்க தலைவர்,
பிரின்ஸ் ஹைலேண்ட்ஸ்.
'தினமலர்' தனி ரகம்!
ரங்கோலி கோலம், சமையல் போட்டி சிறப்பாக இருந்தது. மாலையில் சிறுவர்கள், பெரியவர்கள் 'மேஜிக்' போட்டியை கண்டு ரசித்தனர். பிற நிறுவனங்கள் ஸ்டால் அமைத்து நிகழ்ச்சி நடத்தினால், அவர்களது விளம்பரத்தில் குறியாக இருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் 'தினமலர்' நிகழ்ச்சியில், குடியிருப்புவாசிகளை மகிழ்விப்பதிலும் கவனம் செலுத்தியது.
- பி.மணிகண்டன், 44,
குடியிருப்போர் நலச்சங்க செயலர்,
பிரின்ஸ் ஹைலேண்ட்ஸ்