/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரெட்டேரி கொள்ளளவுஅதிகரிக்கும் பணிக்கு கெடு
/
ரெட்டேரி கொள்ளளவுஅதிகரிக்கும் பணிக்கு கெடு
ADDED : மே 16, 2024 12:59 AM

சென்னை, மாதவரத்தில் உள்ள ரெட்டேரி, 0.32 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இந்த ஏரி நீரை, வறட்சியான காலங்களில், சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஏரியின் கொள்ளளவு உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 43 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில், ஏரியை துார் வாருதல், கரைகள் பலப்படுத்துதல், சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் மற்றும் ஏரியின் மையப்பகுதியில் சிறிய தீவும் உருவாக்கப்பட உள்ளது. கொள்ளளவு 0.42 டி.எம்.சி.,யாக உயர்த்தப்பட உள்ளது.
இதற்கான பணிகளை, நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், வெள்ளக்காலங்களில், கொளத்துார் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தணிகாசலம் நகர் கால்வாயை, பகிங்ஹாம் கால்வாயுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இத்திட்டத்தின் கீழ், 1,800 மீட்டர் கான்கிரீட் மூடுகால்வாய் அமைக்கவும், 2,500 மீட்டர் திறந்தவெளி கால்வாய் கரைகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த இரண்டு, கட்டுமான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர், இப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதற்கு வாய்ப்புள்ளதால், செப்டம்பர் மாதத்திற்கு முன்பே பணிகளை முடிக்க, சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார்.