ADDED : ஆக 01, 2024 12:34 AM
சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் 7 ம் தேதி முதல் 9ம் தேதி வரை, இப்பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்கும். பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட், கருவிகள், உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் குறித்தும், ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.editn.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அலுவலக நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை, 86681 02600, 70101 43022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.