ADDED : ஜூன் 19, 2024 12:16 AM
சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில், மாநில கூடைப்பந்து போட்டிகள், எழும்பூரில் நடக்கின்றன.
பகல், இரவு ஆட்டமான மின்னொளி போட்டியில், லயோலா, இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, எஸ்.டி.ஏ.டி., உட்பட ஆண்களில் 38 அணிகளும், பெண்களில் 16 அணிகளும் பங்கேற்றுஉள்ளன.
நேற்று, பெண்களுக்கான ஆட்டத்தில், எத்திராஜ் அணியை, நித்யா பி.சி., அணி எதிர்கொண்டது. இதில், 45 - 36 என்ற கணக்கில் எத்திராஜ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், பிசியோ கேர் பி.சி., அணி, 43 - 35 என்ற கணக்கில் யூனிகார்ன் பி.சி., அணியை வீழ்த்தியது. கோல்டன் ஈகிள் அணி, 45 - 18 என்ற கணக்கில், ராணி பவுவ் அகாடமியை தோற்கடித்தது.
ஆண்களுக்கான ஆட்டத்தில், எஸ்.பி.சி., அணி, 69 - 42 என்ற கணக்கில் அசைன் பி.சி., அணியையும், சக்சஸ் பி.சி., அணி, 63 - 53 என்ற கணக்கில் டெக்ஸ்டரோஸ் பி.சி., அணியையும் தோற்கடித்தது.