ADDED : ஜூன் 21, 2024 12:24 AM
சென்னை, சென்னையில் ஹோட்டல் ஊழியர் போல பதுங்கி இருந்த, மேற்கு வங்க மாநில கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம், உத்திர தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலிம் லி,37. அப்பகுதியின் ரவுடி. அவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அம்மாநிலத்தில் இருந்து தலைமறைவான சென்னையில் பதுங்கி இருந்தார். தி.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்துள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க போலீசார் தகவல் கிடைத்தது. தமிழக போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
சென்னை போலீசார் விசாரித்ததில், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஹோட்டலில் அலிம் அலி வேலை பார்த்து வருவதை உறுதி செய்தனர். இதையடுத்து, மேற்கு வங்க மாநில போலீஸ் எஸ்.ஐ., பிரச்மோல் ராஜ் சென்னைக்கு வந்தார். சென்னை போலீசார் உதவியுடன், அலிம்அலி நேற்று கைது செய்யப்பட்டார்.
