/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பெர்ட்ரம்' நினைவு கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்
/
'பெர்ட்ரம்' நினைவு கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்
'பெர்ட்ரம்' நினைவு கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்
'பெர்ட்ரம்' நினைவு கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்
ADDED : ஆக 24, 2024 12:19 AM

சென்னை,
லயோலா கல்லுாரியின் நிறுவனர் 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 90வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த கோ - கோ போட்டிக்கான முதல் அரையிறுதியில், சென்னை லயோலா அணி, 10 - 7 என்ற கணக்கில் திருவண்ணாமாலை வேட்டவலம் லயோலா கல்லுாரியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில், விருகம்பாக்கம் ஆவிச்சி அணி 10 - 6 என்ற கணக்கில் வேளச்சேரி குருநானக் கல்லுாரியை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சென்னை லயோலா மற்றும் ஆவிச்சி கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 19 - 17 என்ற புள்ளிக்கணக்கில் லயோலா அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. இன்று, வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடக்க உள்ளன.