ADDED : மார் 07, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம்: மணலி, பர்மா நகரை சேர்ந்தவர் திவாஸ், 21. திருவெற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் புல்லட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம். மாதவரம் 200 அடி சாலையில் இருந்து. புழல் நோக்கி திவாஸ் அவரது யமஹா பைக்கில் சென்றார். இரட்டை ஏரி அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்தது.
அதனால், கீழே விழுந்த திவாஸ் எழுவதற்குள், லாரியின் பின் பக்க சக்கரம் திவாஸ் மீது ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே திவாஸ் பலியானார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரகீஷ்அகமது, 33, என்பவரை கைது செய்தனர்.