ADDED : ஜூன் 19, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல் அடுத்த பாலாஜி நகர், வெஜிடேரியன் காலனி அருகே உள்ள மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை, மாதவரத்தை சேர்ந்த சிலர் கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது, அங்கு சென்ற, புழல், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த சிலர், 'நாங்கள் வழக்கமாக விளையாடும் இடத்தில், நீங்கள் எப்படி விளையாடலாம். உடனே இடத்தை காலி செய்யுங்கள்' எனக்கூறி உள்ளனர்.
இதனால், ஏற்பட்ட வாக்குவாதம் மோதலானது. ஒருவரையொருவர் கிரிக்கெட் பேட், 'ஸ்டம்ப்' ஆகியவற்றால் தாக்கிக்கொண்டனர்.
இதில் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த காமேஸ்வரன், 24, ராகுல், 22, இன்ப அரசு, 25, முகிலன், 26, ஆகியோர் காயமடைந்தனர். விசாரித்த புழல் போலீசார், மாதவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 25, ஜஸ்டின் தாமஸ், 26, கார்த்திகேயன், 27, ஆகியோரை கைது செய்தனர்.