/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.சி., பணியாளர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு கட்டாயம்
/
எம்.டி.சி., பணியாளர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு கட்டாயம்
எம்.டி.சி., பணியாளர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு கட்டாயம்
எம்.டி.சி., பணியாளர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு கட்டாயம்
ADDED : ஜூலை 06, 2024 12:47 AM
சென்னை, 'மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள், 'பயோ மெட்ரிக்' வாயிலாக வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, அதன் நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள்அனைவரும் தவறாமல், பயோ மெட்ரிக் வாயிலாக வருகையை பதிவு செய்ய வேண்டும்.
காலை, மாலை என, இரு வேளைகளிலும் பதிவு செய்ய வேண்டும். காலை 10:11 மணி முதல் 11:00 மணிக்குள் வருவோர், தாமத வருகையாகக் கருதப்படுவர்.
மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் தாமதமாக வந்தால், ஒவ்வொரு தாமத வருகைக்கும், அரை நாள் விடுப்பு கழிக்கப்படும். காலை 11:00 மணிக்கு மேல் வருவோர், அரை நாள் விடுப்பு எடுத்ததாகக் கருதப்படுவர்.
காலையில் பதிவு செய்து, மாலையில் பதிவு செய்யாவிட்டால், அரை நாள் விடுப்பாக கருதப்படும். ஓ.டி., காரணமாக வெளியே சென்று வருவோர், அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து, சம்பளப் பட்டியலில் சேர்க்க வேண்டும். பயோ மெட்ரிக்கில் பதிவு செய்ய தவறினால், விடுப்பு அல்லது ஆப்சென்டாக கருதப்படும்.
வழித்தடங்களில் பேருந்து இயக்கும் ஓட்டுனர், நடத்துனர்கள் புறப்படும் போதும், பணி முடித்த பின்னரும் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.