/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கிடங்கில் 'பயோ மைனிங்' அடுத்த மாதம் பணி நிறைவு
/
குப்பை கிடங்கில் 'பயோ மைனிங்' அடுத்த மாதம் பணி நிறைவு
குப்பை கிடங்கில் 'பயோ மைனிங்' அடுத்த மாதம் பணி நிறைவு
குப்பை கிடங்கில் 'பயோ மைனிங்' அடுத்த மாதம் பணி நிறைவு
ADDED : மே 31, 2024 12:15 AM
சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில், அந்நிலத்தை மீட்டெடுக்கும் பணி, 84 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தினமும், 61.50 லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 32 லட்சம் கிலோ ஈரம் மற்றும் 24.50 லட்சம் கிலோ உலர் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இத்துடன், தெருக்கள் மற்றும் சாலைகள் சுத்தம் செய்வதன் வாயிலாக ஐந்து லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
அந்த இரண்டு குப்பை கிடங்கையும், 'பயோ மைனிங்' முறையில் மீட்டெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 225.16 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில், 35 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டப்பட்டு, 34.02 லட்சம் கன மீட்டர் அளவிற்கு குப்பை தேக்கமடைந்தது.
இந்த நிலத்தை, 'பயோ மைனிங்' முறையில் மீட்டெடுக்கும் பணி நடைபெறுகிறது. 350.64 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இப்பணி, 84 சதவீதம் முடிந்துள்ளது. வரும் ஜூலை மாத்திற்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, அந்நிலம் மீட்கப்பட உள்ளது. அங்கு, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தின் மீட்பு பணி முடிவடைய உள்ளது. இதைதொடர்ந்து, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி, இந்தாண்டு இறுதியில் துவங்கும். மேலும், கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்கும் பணியும் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.