/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா பதுக்கி விற்ற பா.ஜ., பிரமுகர் கைது
/
கஞ்சா பதுக்கி விற்ற பா.ஜ., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 18, 2024 12:21 AM

புளியந்தோப்பு, புளியந்தோப்பு சரகத்தில் உதவி கமிஷனரின் தனிப்படை போலீசார் கருப்பையா தலைமையில் பட்டாளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தனர்.
அப்போது, ஓட்டேரியில், 4 கிலோ கஞ்சாவுடன் திரிந்த ரகு,44 என்ற நபரை ஓட்டேரி காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, பா.ஜ.,வில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலராக உள்ள குணசேகரன், 40 என்பவர் பிடிபட்டார்.
ஆந்திராவில் இருந்து, குணசேகரன் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சில்லரை வியாபாரிகள் வாயிலாக விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் கஞ்சா வாங்கி விற்று வந்த விஜய், 26 என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.