/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிளேஸ்' வாலிபால் லீக்: 8 பள்ளிகள் பலப்பரீட்சை விளையாட்டு செய்திகள்

ADDED : ஆக 02, 2024 12:11 AM
சென்னை,தமிழகத்தில் முதல் முறையாக 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.
இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரிஸ், மான்போர்ட்டு உட்பட, எட்டு பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.
'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில், போட்டிகள் நடக்க உள்ளன. வரும் 2025 ஜன., மாதம் வரை 56 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நேற்று துவங்கிய முதல் நாள் போட்டியை, செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முதல்வர் இருதயராஜ், ஐ.ஓ.பி., வங்கியின் மூத்த மேலாளரும், முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் சிவராமன், சென்னை வாலிபால் சங்கத்தின் செயலர் ஸ்ரீகேசவன், சர்வதேச வாலிபால் வீரர் மோகன் உத்தரபாண்டியன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 25 - 9, 24 - 25, 25 - 17 என்ற கணக்கில் செயின்ட் மேரிசை தோற்கடித்தது.