/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பார்வையற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2024 12:39 AM

சென்னை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், நேற்று, சிந்தாதிரிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:
பார்வையற்ற ஆசிரியர்கள், பல்வேறு போராட்டங்களை கடந்து, பள்ளி, கல்லுாரி, ஆசிரியர் படிப்புகளை முடித்து, பணிக்கு செல்கிறோம். ஆனால், பேருந்தில் நடத்துனர் முதல் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும், மதிப்பதில்லை. எங்களுக்கு திறமை இல்லாதது போல பேசி அவமதிக்கின்றனர்.
இது குறித்து, அவர்களிடம் கேள்வி எழுப்பினால், 'கண் தெரியாத போதே சட்டம் பேசுகிறாயே, உனக்கெல்லாம் பாவம் பார்க்கக்கூடாது' என்கின்றனர். குழந்தைகளும், மாணவர்களும் கூட எங்களை புறக்கணிக்கின்றனர். இந்தநிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

