/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலிக்குடங்களுடன் மறியல் விழிபிதுங்கிய வாரிய அதிகாரிகள்
/
காலிக்குடங்களுடன் மறியல் விழிபிதுங்கிய வாரிய அதிகாரிகள்
காலிக்குடங்களுடன் மறியல் விழிபிதுங்கிய வாரிய அதிகாரிகள்
காலிக்குடங்களுடன் மறியல் விழிபிதுங்கிய வாரிய அதிகாரிகள்
ADDED : மே 18, 2024 12:28 AM

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலம் எர்ணாவூரில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சில மாதங்களாக, அழுத்தம் குறைவு காரணமாக சரிவர வினியோகம் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மணலி, குடிநீரேற்ற தொட்டியில் மின் மோட்டர் பழுது காரணமாக, நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டும், லாரி குடிநீர் வினியோகம் செய்யாமல், அதிகாரிகள் மெத்தமான இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மாதர் சங்கத்தினருடன் இணைந்து, நேற்று காலை, எர்ணாவூர் - முருகன் கோவில் சந்திப்பில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த குடிநீர் வாரிய அதிகாரிகள், நான்கு லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்து, மறியலை முறியடிக்க முயன்றனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.