/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்புக்குள் வீசப்பட்ட ஆண் சிசு சடலம்
/
குடியிருப்புக்குள் வீசப்பட்ட ஆண் சிசு சடலம்
ADDED : ஆக 22, 2024 12:36 AM

அம்பத்துார்,
அம்பத்துார், மண்ணூர்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவில் மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. அங்கு, 43 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நேற்று மாலை குடியிருப்பின் முதல் தளத்தில் கழிவறைக்கு அருகே, வெண்டிலேட்டர் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியது. குடியிருப்புவாசிகள் அங்கு சென்று பார்த்த போது, பிறந்து சில மணி நேரங்களே ஆன, குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசுவின் சடலம் கிடந்தது.
இதுகுறித்து அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியிருப்பில் கர்ப்பிணியர் யாரும் இல்லை என தெரியவந்ததால், வெளியாட்கள் யாரேனும் குழந்தையின் உடலை கொண்டு வந்து, இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.