/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு
/
ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு
ADDED : மார் 07, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நான்காவது நடைமேடை அருகே, ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டிய பள்ளத்தில், 4 வயது ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது.
குழந்தையின் கால் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
குழந்தையின் சடலம் இங்கு எப்படி வந்தது, யாரேனும் குழந்தையை கடத்தி கொலை செய்து, சடலத்தை வீசி சென்றனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.